< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தினத்தந்தி
|
3 Dec 2024 7:02 PM IST

புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல், கடந்த 30-ந்தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு, புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. அப்போது, 'பெஞ்சல்' புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

இதனிடையே புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்கள் நடைபெறும் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே சமயம், அங்குள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்