< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோவா: சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
|25 Dec 2024 7:53 PM IST
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பனாஜி,
கோவாவின் ஹெலங்கெடி கடற்கரை பகுதியில் உள்ள கடலில் இன்று மாலை சுற்றுலா படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 21 பேர் பயணித்தனர்.
நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் சுற்றுலா படகு கவிழ்ந்தது. இதனால், படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் தத்தளித்த 21 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் 54 வயதான ஆண் என்பதும் அவர் லைப் ஜாக்கெட் அணியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.