< Back
தேசிய செய்திகள்
ஒடிசா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன - காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

ஒடிசா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
10 Nov 2024 11:24 AM IST

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பாதம்படி காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில், தசரா பண்டிகை சமயத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது ஆண் நண்பருடன் புரிகாட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றதாகவும், அந்த உணவகத்தின் உரிமையாளருடன் சேர்ந்து தனது ஆண் நண்பர் தன்னை தவறான முறையில் வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி தனது ஆண் நண்பர், உணவக உரிமையாளர், ஒரு சிறுவன் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் புகாரை பதிவு செய்வதற்கு 3 காவல் நிலையங்கள் மறுப்பு தெரிவித்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்யாமல் போலீசார் அவரை அலைக்கழித்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கட்டாக்-பாராமதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபியா பிர்தவுஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பூரி காட் காவல் நிலையம், சதார் காவல் நிலையம் மற்றும் பராங் காவல் நிலையம் ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு சென்றபோதும் அவரது புகார் பதிவு செய்யப்படாததால், இறுதியாக பாதம்படி காவல்நிலையத்திற்கு சென்று தனது புகாரை பதிவு செய்துள்ளார் என சோபியா பிர்தவுஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி டி.ஜி.பி. குரானியாவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபியா பிர்தவுஸ் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்