ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறதா பிஜு ஜனதா தளம்? பாஜக முன்னிலை
|ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. ஒடிசாவில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன், ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 4 கட்டங்களாக ஒடிசாவில் தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன.
ஒடிசாவில் சட்டசபை தேர்தலில் 63.46 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை ஒன்பது மணி நிலவரப்படி பாஜக 58 இடங்களிலும் பிஜு ஜனதா தளம் 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10 இடத்தில் முன்னிலையில் உள்ளது.