< Back
தேசிய செய்திகள்
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

தினத்தந்தி
|
15 Feb 2025 6:51 PM IST

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மும்மொழிக்கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? . புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது' என்றார்.

மேலும் செய்திகள்