< Back
தேசிய செய்திகள்
மாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல -  நிர்மலா சீதாராமன்
தேசிய செய்திகள்

மாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல - நிர்மலா சீதாராமன்

தினத்தந்தி
|
30 July 2024 6:20 PM IST

காங்கிரஸ் பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்லமா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிஷன் 2047 க்கான முதல் படியாகும். பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி ஆகும். கொரோனா காலத்தில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் நாம் மீண்டெழுந்தோம். சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014 ஐ விட விவசாய துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.சுகாதாரத்துறைக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் எந்த துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை. கல்விக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டு உள்ளது.

நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமில்லை.தவறான புரிதலோடு சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

2004-05-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை. 2009-2010 ஆண்டுகளில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. 2006-07 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இல்லை. 2009- 2010 ஆண்டுகளில் 2 மாநிலங்களின் பெயர் மட்டுமே இருந்தது.

நீங்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் மட்டும் தவறா.மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன.பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு பெரிய நெடுஞ்சாலை திட்டம்அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மக்களவையில் ஏ1 ஏ2 எனக்கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்