< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
|12 Dec 2024 1:08 PM IST
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் இளைஞர்களை தீவிரவாதிகளாக ஆக்கி இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பும் சதித்திட்டத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையானது உத்தரபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக், பாரமுல்லாவில் மற்றும் புட்காம் மாவட்டங்களில் இன்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.