< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
தேசிய செய்திகள்

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
2 July 2024 10:03 AM IST

18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

மேலும் செய்திகள்