< Back
தேசிய செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு
தேசிய செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு

தினத்தந்தி
|
5 Jun 2024 7:12 PM IST

மோடி இல்லத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துனர்.

அதன்படி, 3வது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா,ராஜ்நாத் சிங், உள்பட மொத்தம் 21 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காலதாமதம் இன்றி உடனடியாக ஆட்சியமைக்க மோடிக்கு நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்