< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் இரண்டு பேர் படுகொலை

4 Feb 2025 1:27 PM IST
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் தர்ரெம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்டிச்சேரு கிராமத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் நேற்று இரவு இரண்டு கிராமவாசிகளின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் கரம் ராஜு(32) மற்றும் மத்வி முன்ன(27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் 16ம் தேதி, பிஜாப்பூரில் உள்ள மிர்தூர் பகுதியில் போலீஸ் தகவல் அளிப்பவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபரை நக்சலைட்டுகள் கொன்றனர்.