< Back
தேசிய செய்திகள்
மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றிய நடிகர்: 16 ஆண்டுகளுக்கு பிறகு காதல் மனைவியுடன் திருமணம்
தேசிய செய்திகள்

மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றிய நடிகர்: 16 ஆண்டுகளுக்கு பிறகு காதல் மனைவியுடன் திருமணம்

தினத்தந்தி
|
26 Jun 2024 2:50 AM IST

திருமண நிகழ்ச்சியில் மகள்கள் வைகா, வேதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்

திருவனந்தபுரம்,

மலையாள காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி. இவருக்கும், கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. அவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி அனுஜாவை கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைகா என 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் தர்மஜன் போல்காட்டி மனைவி அனுஜாவுடன் கொச்சி அருகே கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் மகள்கள் விருப்பப்படி காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி மற்றும் அனுஜா திருமணம் செய்தனர்.

நிகழ்ச்சியில் மகள்கள் வைகா, வேதா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொங்கையர் பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்