< Back
தேசிய செய்திகள்
பெண்களுக்கு மாதம் ரூ.1,100 வழங்குவதே எனது அடுத்த திட்டம்.. - பஞ்சாப் முதல்-மந்திரி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

"பெண்களுக்கு மாதம் ரூ.1,100 வழங்குவதே எனது அடுத்த திட்டம்.." - பஞ்சாப் முதல்-மந்திரி

தினத்தந்தி
|
28 Oct 2024 6:47 AM IST

இடைத்தேர்தல் நடைபெறும் சப்பேவால் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து பஞ்சாப் முதல்-மந்திரி நேற்று பிரசாரம் செய்தார்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவோம்" என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக பகவந்த் மான் பொறுப்பேற்றார். ஆனால் இன்று வரை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. இதனிடைய கடந்த மே மாதம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-மந்திரி பகவந்த் மான், தனது அரசாங்கம் பெண்களுக்கு ரூ.1,000-க்கு பதிலாக ரூ.1,100 வழங்கும் என கூறினார்.

இந்த நிலையில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி பகவந்த் மான் அங்கு நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், "இந்த பிரசார கூட்டத்தில் பெண்கள் அதிமாக இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாக்கள் மற்றும் சகோதரிகள் ஆம் ஆத்மி பேரணிகளுக்கு மட்டுமே வருகிறார்கள், ஏனெனில் ஆம் ஆத்மி அரசு தங்கள் தேவைகளை கவனித்துக்கொள்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.1,100 வழங்குவதே எனது அடுத்த திட்டம்" என கூறினார்.

மேலும் செய்திகள்