< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: முதியவர் பலி
|8 Jan 2025 3:42 AM IST
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் பலர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் உள்ள ஒருவீட்டில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்திருந்த வீட்டில் மூச்சு திணறி மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் ராகுல் மிஸ்ரா (வயது 78) உள்பட 2 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், முதியவர் ராகுல் மிஸ்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். அதேவேளை, மற்றொரு நபரான ரவுனவ் (வயது 38) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.