ஜார்க்கண்ட் அருகே மும்பை - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்
|ஹவ்ராவில் இருந்து மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரெயில் விபத்தை ஒட்டி ரெயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
டாடாநகர்: 06572290324
சக்ரதர்பூர்: 06587 238072
ரூர்கேலா: 06612501072, 06612500244
ஹவுரா: 9433357920, 03326382217
ராஞ்சி: 0651-27-87115
HWH ஹெல்ப் டெஸ்க்: 033-26382217, 9433357920
SHM ஹெல்ப் டெஸ்க்: 6295531471, 7595074427
KGP ஹெல்ப் டெஸ்க்: 03222-293764
CSMT ஹெல்ப்லைன்: 55993
P&T: 022-22694040
மும்பை: 022-22694040
நாக்பூர்: 7757912790
ரெயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.