< Back
தேசிய செய்திகள்
மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதல்.. 13 பேர் பலி
தேசிய செய்திகள்

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதல்.. 13 பேர் பலி

தினத்தந்தி
|
18 Dec 2024 8:51 PM IST

கடற்படை படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை:

மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து இன்று மாலையில் எலிபெண்டா தீவுக்கு பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த கடற்படை படகு, பயணிகள் படகின்மீது பயங்கரமாக மோதியது.

இதில், பயணிகள் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 101 பேர் மீட்கப்பட்டதாகவும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை துறைமுகத்தில் கடற்படை படகின் என்ஜினை சோதனை செய்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்