< Back
தேசிய செய்திகள்
சீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

சீருடையில் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
17 Aug 2024 11:46 AM IST

சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் போட்டி தேர்வாளர்களுக்கான ஒரு தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தை ஊக்குவித்து பெண் காவலர் ஒருவர் விளம்பரத்தில் நடித்துள்ளார். அவர் தனது போலீஸ் சீருடையை அணிந்தவாறே அந்த மையத்தை விளம்பரப்படுத்தியுள்ளார். பெண் காவலர் நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, ரத்லாம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா கூறுகையில், "ஒரு பெண் காவலர் தனது சீருடையில் ஒரு தனியார் பயிற்சி மையத்தை ஊக்குவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

மேலும் செய்திகள்