< Back
தேசிய செய்திகள்
ம.பி.:  மக்கள் மீது பசுக்களை நடக்க விட்டு வினோத சடங்கு செய்த கிராமவாசிகள்
தேசிய செய்திகள்

ம.பி.: மக்கள் மீது பசுக்களை நடக்க விட்டு வினோத சடங்கு செய்த கிராமவாசிகள்

தினத்தந்தி
|
2 Nov 2024 9:39 AM IST

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு வினோத பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டது.

உஜ்ஜைன்,

தீபாவளி பண்டிகை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் இந்த பண்டிகை பல நாட்களுக்கும் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு மக்களில் ஒரு பிரிவினர் விரதம் இருந்து வழிபடுவதும் உண்டு. இருளை நீக்கி, ஒளி வெற்றி கொண்ட மற்றும் தீமையை நன்மை வெற்றி பெற்றதற்கான அடையாளமாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் செல்வ வளம் வேண்டி இறைவழிபாடு செய்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இனிப்புகள் மற்றும் பரிசுகளை பகிர்ந்து கொள்வதும், பரிமாறி கொள்வதும் கொண்டாட்டங்களில் இடம் பெறும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் பிதத்வாத் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு வினோத பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டது.

இதன்படி, தீபாவளிக்கு மறுநாள் இந்த பாரம்பரிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த கிராம மக்கள் தெருவில் வரிசையாக படுத்து கொள்வார்கள். அவர்கள் மீது வீட்டில் வளர்க்கும் பசுக்களை நடக்க செய்வார்கள். கோவர்த்தன பூஜை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடைமுறையில் அந்த கிராமத்தின் ஆண்கள் கலந்து கொள்கின்றனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது.

மேலும் செய்திகள்