< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
8 Jan 2025 2:56 AM IST

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 300க்கும் அதிகமான விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்