< Back
தேசிய செய்திகள்
நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் - சர்வதேச ஆய்வு நிறுவனம்
தேசிய செய்திகள்

நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் - சர்வதேச ஆய்வு நிறுவனம்

தினத்தந்தி
|
15 Nov 2024 3:29 PM IST

நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி,

சர்வதேச நிறுவனங்கள், நாடுகளின் நிதி நிலை, பொருளாதாரம், ஜிடிபி வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிடும் சர்வதேச ஆய்வு நிறுவனம் 'மூடி'. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆய்வு நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2025ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாகவும், 2026ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று மூடி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்