< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மோடியின் பதவியேற்பு விழா: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு
|9 Jun 2024 8:43 PM IST
பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் நாட்டின் பிரதமராக, 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் அழைப்பினை ஏற்று உலக தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். எனினும், ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை அழைக்கவில்லை என கூறப்பட்டது. எனினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விழாவில் பங்கேற்பார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.