< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
|31 Oct 2024 3:50 PM IST
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
குஜராத்,
ஆண்டுதோறும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில் குஜராத்தில் முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளியை கொண்டாடினார். ராணுவ உடையில் சென்ற பிரதமர் மோடி வீரர்களுக்கு இனிப்புக்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "தீபாவளி பண்டிகையை ஜவான்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி... உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.