< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|7 Nov 2024 2:34 PM IST
மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ்வால்,
அசாம் மாநிலத்தின் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோட கிராமத்தில் நேற்று முன்தினம் அசாம் போலீசார், மிசோரம் கலால் மாற்றும் போதைப்பொருள் துறை நடத்திய கூட்டு முயற்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 128 கிராம் ஹெராயின் மற்றும் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஐஸ்வால் பகுதியைச் சேர்ந்த நங்கவ்குபா (30), ருவாத்பெலா (36) மற்றும் மியான்மரை சேர்ந்த எல்டி சியாமா (39) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.