< Back
தேசிய செய்திகள்
ஒடிசாவில் டிரக் மீது மினிவேன் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

ஒடிசாவில் டிரக் மீது மினிவேன் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
2 Nov 2024 4:23 PM IST

ஒடிசாவில் டிரக் மீது மினிவேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கைகானபாலி பகுதி அருகே இன்று அதிகாலை டிரக் மீது மினிவேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மினிவேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கந்தகொடா மற்றும் சமர்பிந்தா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திபாவளி பண்டிகையை முன்னிட்டு, சக்பிளை என்ற கிராமத்தில் நடைபெற்ற கீர்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினிவேனில் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்