< Back
தேசிய செய்திகள்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்

File image

தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
15 Oct 2024 1:22 PM IST

இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மதியம் 12:01 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்