< Back
தேசிய செய்திகள்
மேகாலயா: சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 3 வங்காளதேச பெண்கள் கைது
தேசிய செய்திகள்

மேகாலயா: சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 3 வங்காளதேச பெண்கள் கைது

தினத்தந்தி
|
11 Feb 2025 5:36 PM IST

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த 3 பெண்கள், நேற்று சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 3 பெண்களும் வேலை தேடி இந்தியாவிற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்