< Back
தேசிய செய்திகள்
ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை
தேசிய செய்திகள்

ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
26 Dec 2024 1:19 PM IST

மாணவரின் அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்த ரத்னேஷ் குமார் மிஸ்ரா (21) என்பவர் நேற்று அவரது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருகரை சேர்ந்த ரத்னேஷ் நேற்று முன்தினம் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிக்கு திரும்பியுள்ளார். மேலும் நேற்று ரத்னேஷ் அவனுடைய தந்தையுடன் புரி கோவிலுக்கு செல்லவிருந்தார். நேற்று காலை அவனுடைய தந்தை பல முறை அவரை போனில் அழைத்துள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை தட்டியுள்ளார். வெகு நேரமாக கதவு திறக்காததால் சில மாணவர்களுடன் சேர்ந்து அவனுடைய தந்தை கதவை உடைத்துள்ளார். அப்போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ரத்னேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்னேசை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்குவதற்கு முன், அவர் தனது இளைய சகோதரருக்கு ஆடியோ செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் நிலத்தை விற்க வேண்டாம் என்று அவர்களின் தந்தையிடம் கோரினார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியே ரத்னேஷின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் செய்திகள்