< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமைதி, செழிப்பு நிலவட்டும் - பிரதமர் மோடி ஓணம் வாழ்த்து
|15 Sept 2024 7:50 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கேரளாவின் மகத்தான கலாசாரத்தை போற்றும் வகையில், உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்களால் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். எங்கும் அமைதி, செழிப்பு, நல்வாழ்வு நிலவட்டும்" என்று தெரிவித்துள்ளார்.