கனிவான அணுகுமுறைக்காக மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
|முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கனிவான மற்றும் மென்மையான அணுகுமுறையை கொண்டவர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.
அவருடைய மறைவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு, மிக வருத்தத்திற்குரியது. பிரபல பொருளாதார நிபுணர் மட்டுமின்றி, அறிவாளியான அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். கனிவான மற்றும் மென்மையான அணுகுமுறையை கொண்டவர் என்பதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். திறமையான நிர்வாகியாக இருந்ததுடன், நிதி மந்திரி மற்றும் பிரதமராக, பல தசாப்தங்களாக நாட்டுக்கு சேவையாற்றியவர் என்று தெரிவித்து உள்ளார்.