மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்... 15 வயது சிறுவனை கொன்ற நபர் கைது
|மனைவியுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் 15 வயது சிறுவனை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குருகிராம்,
அரியானாவில் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் 15 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கடந்த மாதம் 26-ந்தேதி கலீல்பூர் கிலாவாஸ் அணை அருகே உயிரிழந்த நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேவாரி மாவட்டம் சில்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் (28 வயது) மற்றும் அவரது நண்பர் தருண் என்ற ஜோனி (29 வயது) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அமித், தனது மனைவியுடன், உயிரிழந்த சிறுவனுக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், சிறுவனை சம்பவத்தன்று தனது நண்பர் தருணின் உதவியுடன் கலீல்பூர் கிலாவாஸ் அணைக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.