< Back
தேசிய செய்திகள்
மது அருந்தும்போது தகராறு: நண்பனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற நபர் கைது
தேசிய செய்திகள்

மது அருந்தும்போது தகராறு: நண்பனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற நபர் கைது

தினத்தந்தி
|
10 July 2024 12:37 AM IST

தலைமறைவாக இருந்த அனிஷை போலீசார் கைது செய்தனர்.

குருகிராம்,

அரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பூப் சிங். இவர், தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் மட்டையை எடுத்து நண்பர் என்றும் பார்க்காமல் பூப் சிங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் பூப் சிங், படுகாயமடைந்து சரிந்து விழுந்தார். உடனே அனிஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து பூப் சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூப் சிங் உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அனிஷை கண்டுபிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்