< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
|21 Nov 2024 5:48 AM IST
வாலிபரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனாஜி,
டெல்லியில் இருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் டெல்லி ஜனக்புரி பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் பயணித்தார். விமானத்தில் அவரது இருக்கைக்கு அருகில் அரியானா மாநிலம் பானிபட் நகரை சேர்ந்த ஜிதேந்தர் ஜாங்கியன் (23) என்ற வாலிபர் அமர்ந்திருந்தார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஜிதேந்தர் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. விமானம் டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த பெண் இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஜிதேந்தரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.