< Back
தேசிய செய்திகள்
மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபர்...வீடியோ வைரல்
தேசிய செய்திகள்

மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபர்...வீடியோ வைரல்

தினத்தந்தி
|
1 Jan 2025 5:30 PM IST

ஆந்திர மாநிலத்தில் மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள சிங்கிபுர கிராமத்தில் ஒரு நபர் மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று புத்தாண்டை முன்னிட்டு மது அருந்திய நபர், போதையில் தள்ளாடியபடி அங்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்த வீட்டின் அருகில் இருக்கும் மின் கம்பத்தில் சாய்ந்து நின்றிருக்கிறார். பின் சற்றும் எதிர்பாராத வேளையில், அவர் திடீரென மின் கம்பத்தின் மீது ஏறி படுத்து உறங்கி இருக்கிறார்.

இதனைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் அவரை கீழே இறங்க வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் கீழே இறங்காததால் மின்அப்பகுதியில் மின்சாரம் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. வெகு நேர போரட்டத்திற்கு பிறகு அந்த நபரை கீழே இறக்கிய மக்கள் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். போதை ஆசாமி மின்கம்பத்தில் படுத்து உறங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்