< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஓடும் மெட்ரோ ரெயிலில் பிச்சையெடுத்த நபர்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
|15 Dec 2024 1:28 AM IST
மெட்ரோ நிர்வாகிகளிடம் ரெயிலில் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை எடுத்து செல்ல முடியாது. பீடி, சிகரெட், மதுபானங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு செல்லும் மெட்ரோ ரெயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிச்சை எடுத்துள்ளார்.
இதை பார்த்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சிலர் மெட்ரோ நிர்வாகிகளிடம் ரெயிலில் பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒயிட்பீல்டு செல்லும் ரெயிலில் ஒருவர் பிச்சை எடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.