< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபர் கைது
|15 Dec 2024 4:21 PM IST
குடிபோதையில் தெருநாயுடன் தகாத உறவு கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நேற்று முன்தினம் சாலையோரம் நின்ற தெருநாயிடம் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அதாவது சாலையோரம் இருந்த மரத்தில் நாயை கட்டிப்போட்டு தகாத உறவில் ஈடுபட்டார்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாரியை சேர்ந்த பசவா என்பது தெரியவந்தது. குடிபோதையில் தெருநாயிடம் தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொதுமக்கள் சென்னப்பட்டணா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பசவா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.