< Back
தேசிய செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு
தேசிய செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு

தினத்தந்தி
|
27 July 2024 12:24 PM IST

நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்.

மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும் மேற்கு வங்காளத்திற்கு நிதி வேண்டும் என பேசிய போது மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்