மணிப்பூரில் முதல்-மந்திரி பங்களா அருகே பயங்கர தீ விபத்து
|மணிப்பூரில் முதல் மந்திரி பிரேன் சிங்கின் பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இம்பால்,
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள தலைமைச் செயலக வளாகம் அருகே முதல் மந்திரி பிரேன் சிங்கின் பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களிடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் மோதல் வன்முறையாக மாறியுள்ளதால் அங்கு தினம் தினம் கலவரம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் தலைமைச் செயலக வளாகம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.