< Back
தேசிய செய்திகள்
திருமணமான ஒன்றரை மாதத்தில் பிரபல மல்யுத்த வீரர் தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

திருமணமான ஒன்றரை மாதத்தில் பிரபல மல்யுத்த வீரர் தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
29 Jun 2024 11:20 AM IST

பிரபல மல்யுத்த வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

பிரபல மல்யுத்த வீரர் சுராஜ் நிக்கம் (வயது 30). மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்குமுன் திருமணமானது.

இந்நிலையில், மல்யுத்த வீரர் சுராஜ் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுராஜின் செல்போனுக்கு வெகுநேரம் தொடர்புகொண்டும் அவர் பதில் அளிக்காததால் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு சுராஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சுராஜை மீட்டர் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மல்யுத்த வீரர் சுராஜ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர் சுராஜ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்