< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியம்: குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
|8 Dec 2024 1:17 AM IST
புனேவில் உள்ள ஹதாஸ்பூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புனே,
மராட்டிய மாநிலம் புனே நகரின் ஹடாஸ்பூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்;
தானே முனிசிபல் கார்ப்பரேஷன் அளித்த தகவலின் படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.