< Back
தேசிய செய்திகள்
மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

தினத்தந்தி
|
23 Nov 2024 6:55 PM IST

மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஜார்கண்ட் மற்றும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல, ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி நீர், நிலம், காடுகள் மட்டுமின்றி அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்.

மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அவற்றை விரிவாக ஆராய்வோம். ஆதரவளித்த அனைத்து வாக்காளர் சகோதர, சகோதரிகளுக்கும், கடுமையாக உழைத்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்