< Back
தேசிய செய்திகள்
மராட்டிய தேர்தல் முடிவு: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை
தேசிய செய்திகள்

மராட்டிய தேர்தல் முடிவு: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை

தினத்தந்தி
|
23 Nov 2024 11:17 AM IST

மராட்டியத்தின் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்து வருகிறார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே 30,629 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தவ் சிவசேனா கட்சி வேட்பாளர் கேதார் திகே 7,748 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 22,881 ஆகும்.

மேலும் செய்திகள்