< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மோசமான வானிலை: முதல்-மந்திரி ஷிண்டே ஹெலிகாப்டர் சொந்த கிராமம் திரும்பியது
|19 Oct 2024 5:22 AM IST
காரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே புனே புறப்பட்டு சென்றார்.
மும்பை,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சத்தாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டரேவில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புனே புறப்பட்டு சென்றார். இந்த கிராமம் சகாயத்ரி மலைதொடருக்கு மத்தியில் அமைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக செல்லும் வழியில் மழைமேகங்கள் சூழ்ந்திருந்ததாக தெரிகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மீண்டும் முதல்-மந்திரி கிராமத்திற்கே திரும்பியது. அங்கு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் காரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே புனே புறப்பட்டு சென்றார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே புனேயில் இருந்து டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.