< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில்  மகாயுதி கூட்டணி  வெற்றி பெற மக்கள் நலத்திட்டங்களே காரணம்: அஜித் பவார்
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற மக்கள் நலத்திட்டங்களே காரணம்: அஜித் பவார்

தினத்தந்தி
|
1 Dec 2024 4:43 AM IST

வாக்குப்பதிவு எந்திர முறைகேடு புகாரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்றும், எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது மக்கள் நல திட்டங்கள் தான் என்று அஜித்பவார் கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதனை மறுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) தலைவர் அஜித் பவார், மக்கள் நலத்திட்டங்களே வெற்றிக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து நிறைய பேர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் இன்றுவரை, அவைகளில் முறைகேடு செய்யமுடியும் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. மக்களவை தேர்தலில் அவமானகரமான தோல்விக்கு பின்னர் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர சில திட்டங்களை அறிவித்தோம்.

எதிர்க்கட்சிகளும் பல திட்டங்களை அறிவித்தன. மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது மக்கள் நல திட்டங்கள் தான்"என்றார்.

மேலும் செய்திகள்