< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டிய தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சிவசேனா
|23 Oct 2024 2:39 AM IST
மராட்டிய தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்தது. முதற்கட்டமாக 45 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.