< Back
தேசிய செய்திகள்
மராட்டிய தேர்தல்: ஹிங்கோலியில் மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்
தேசிய செய்திகள்

மராட்டிய தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்

தினத்தந்தி
|
20 Nov 2024 12:20 PM IST

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், ஹிங்கோலி மாவட்டத்தில் 21 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. இதனையடுத்து அந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'ஹிங்கோலி மாவட்டத்திற்குட்பட்ட பாஸ்மத், ஹிங்கோலி மற்றும் கலம்நூரி ஆகிய தொகுதிகளில் மாதிரி வாக்குப்பதிவின்போது செயல்படாத 21 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை' என்றனர்.

மேலும் செய்திகள்