< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் துணை ஜனாதிபதி புனித நீராடல்

1 Feb 2025 6:26 PM IST
திரிவேணி சங்கமத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் புனித நீராடினார்.
லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய கும்பமேளா, வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மகா கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் புனித நீராடினார். அப்போது வேத மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. முன்னதாக, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜகதீப் தன்கரை, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வரவேற்றார்.