< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நியமனம்
|20 Nov 2024 5:49 PM IST
மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அண்மையில் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்டு டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்த ஜனாதிபதி கிருஷ்ணகுமாரை நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.