கணவனின் முதல் மனைவியை 50 முறை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
|கணவனின் முதல் மனைவியை இளம்பெண் 50 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019ம் ஆண்டு ஜெயா (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஜெயாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டு மன்சி (வயது 22) என்ற பெண்ணை ராம்பாபு 2வதாக திருமணம் செய்துகொண்டார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளியன்று இரவு (31ம் தேதி) ஜெயாவுக்கும் மன்சிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனின் முதல் மனைவியான ஜெயாவை இரண்டாவது மனைவி மன்சி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 50 முறை கத்தியால் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஜெயாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மன்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.