< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
|27 July 2024 10:35 PM IST
மத்திய பிரதேசத்தின் 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சத்னா, விதிஷா, ரெய்சன், பெதுல், பந்துர்னா மற்றும் சிதி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்கள் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் தலைநகர் போபாலில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாகன போக்குவரத்து முடங்கியது. மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.
இதேபோன்று, போபாலில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வேறு 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.