< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு
|8 Dec 2024 9:43 PM IST
மத்திய பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் மோரெனா மாவட்டத்தில் உள்ள சிறப்பு ஆயுத படைகளின் (SAF) ஆயுதக் கிடங்கில் 9 மி.மீ. துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி சுமார் 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த தகவல் நேற்றைய தினம் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், சிறப்பு ஆயுத படைகளின் 2-வது மற்றும் 5-வது பட்டாலியனின் கம்பெனி கமாண்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக மோரெனா மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோபால் தாக்கட் தெரிவித்துள்ளார்.
மேலும் தோட்டாக்கள் மட்டுமே திருடு போயிருப்பதாகவும், துப்பாக்கிகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.