< Back
தேசிய செய்திகள்
கடல் கடந்த காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுவை இளைஞர்
தேசிய செய்திகள்

கடல் கடந்த காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுவை இளைஞர்

தினத்தந்தி
|
10 Jun 2024 6:57 PM IST

முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பொண்ணு மாரியம்மன் கோவிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். பி.டெக்., படித்த இவர், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கு அந்நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத், என்ற பெண்ணுடன் வெங்கட்ராமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு இருவரும் கடந்த 10 வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் பணி முடிந்து வெங்கட்ராம் மீண்டும் சொந்த ஊரான புதுச்சேரிக்கு திரும்பினார். ஆனாலும் இரண்டு பேரும் தொலைபேசி மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதை தங்களது வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு இரு விட்டார்களும் சம்மதமும் தெரிவித்தனர்

இதனையடுத்து இருவருக்கும் இன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு பொன்னு மாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இரு விட்டார்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்